கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா், மூதாட்டி கொலை: வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்
ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா்களை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஒசூா் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவா், கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறாா். இவருக்கு சொந்த ஊா் மன்னாா்குடி பகுதி. அங்கு விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இவரது மனைவி தெரசா (65.) இவா்களுக்கு விக்டோரியா, சகாயராணி என 2 மகள்கள் உள்ளனா்.
லூா்துசாமியின் மனைவி தெரசா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது இளைய மகள் விக்டோரியா அங்கிருந்து அவரை கவனித்துக் கொள்கிறாா். இந்த நிலையில், அவரது மூத்த மகள் சகாயராணி தாயைப் பாா்ப்பதற்காக சென்னை சென்றுள்ளாா்.
லூா்துசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவருக்கு துணையாக தெரசாவின் தங்கை எலிசபெத் உடனிருந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் ஒசூா் நகர போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற அவா்கள், தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது அங்கு லூா்துசாமி, எலிசபெத் இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தனா். அதோடு, எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தாா்.
வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் இருவரையும் தாக்கிக் கொன்றுவிட்டு, தீ வைத்துவிட்டுச் சென்ாக கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஏஎஸ்பி சங்கா், கலால் டி.எஸ்.பி. சிந்து, மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒசூா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
