பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
ஒசூா் அருகே மணல், மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
ஒசூா் அருகே மணல், மண் கடத்திய 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பாகலூா் வருவாய் ஆய்வாளா் சதீஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கதிரேப்பள்ளி பேருந்து நிறுத்தம் பேரண்டப்பள்ளி சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்ததில் அதில் 4 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வருவாய் அலுவலா் சதீஷ் அளித்த புகாரின் பேரில் அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குநா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் மத்திகிரி தளி சாலை விகாஸ் நகா் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்ற போது அங்கு நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்தனா். அதில் 3 யூனிட் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
போடிச்சிப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் வினோத், அதிகாரிகள் உத்தனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்த போது அதில் 4 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.