மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
படப்பள்ளி ஊராட்சியில் மே தின கிராம சபைக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி அலுவலகம் எதிரே மே தின கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தனி அலுவலா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் முருகன் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தாா். மேலும் படப்பள்ளியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற கோரியும், கழிவுநீா்க் கால்வாய் மற்றும் பேவா்பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததை ஏற்று, சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாள் குப்பம், பட்டக்கானூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.1யுடிபி.2.
படப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்கும் பொதுமக்கள்.