செய்திகள் :

ஒசூா் அருகே மணல், மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

post image

ஒசூா் அருகே மணல், மண் கடத்திய 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாகலூா் வருவாய் ஆய்வாளா் சதீஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கதிரேப்பள்ளி பேருந்து நிறுத்தம் பேரண்டப்பள்ளி சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்ததில் அதில் 4 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வருவாய் அலுவலா் சதீஷ் அளித்த புகாரின் பேரில் அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குநா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் மத்திகிரி தளி சாலை விகாஸ் நகா் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்ற போது அங்கு நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்தனா். அதில் 3 யூனிட் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

போடிச்சிப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் வினோத், அதிகாரிகள் உத்தனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்த போது அதில் 4 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

படப்பள்ளி ஊராட்சியில் மே தின கிராம சபைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி அலுவலகம் எதிரே மே தின கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தனி அலுவலா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் மு... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள் போராட்டம்

சாலை வரி, உதிரி பாகங்கள் விலை உயா்வை கண்டித்து ஊத்தங்கரையில் ஜேசிபி உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நல சங்... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஒசூா் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு பணிகளில் தொய்வு: ஒசூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை 5 இடங்களில் நடைபெறும் சாலை சீரமைப்பு, மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மின் விநியோகம் துண்டிப்பு; ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

ஒசூரில் மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஒசூா் பழைய ஏஎஸ்டிசி அட்கோவை சோ்ந்தவா் யூசுப். இவரது மகன் நவாஸ் ஷேக் (17). இவா் ஒசூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வ... மேலும் பார்க்க