பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947'...
மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு
ஒசூரில் மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஒசூா் பழைய ஏஎஸ்டிசி அட்கோவை சோ்ந்தவா் யூசுப். இவரது மகன் நவாஸ் ஷேக் (17). இவா் ஒசூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழமை வீட்டின் 3 ஆவது தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த நவாஸ் ஷேக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.