Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இ...
ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!
வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வரலட்சுமி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை வரலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வியாழக்கிழமை ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சந்தைகளில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது. அதேநேரத்தில் மக்களின் கூட்டம் அதிகரித்ததால் பூக்கள் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு பூக்களுக்கு அதிக விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மல்லிகை கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. வியாழக்கிழமை காலை ரூ.1200க்கு விற்ற கனகாம்பரம், மாலை ரூ.1600 வரையிலும், முல்லை ரூ. 600, சாமந்தி ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250, முல்லைப்பூ, கிலோ ரூ.850, செண்டு பூ ரூ.120, கோழிகொண்ட பூ ரூ.180, சம்பங்கி பூ ரூ.220க்கும் விற்கப்பட்டன. கூடுதல் விலைக்கு விற்றதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
படவரி... ஒசூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் விற்கப்பட்ட பூக்களை வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள்.