Automobile Sales சரிவு ஏன் | EID Parry India q1 results-ல் கவனிக்க வேண்டியது | I...
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்து வேளாண் இயந்திரங்கள் குறித்த கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது:
இந்த முகாமில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விவரங்கள் போன்றவற்றிற்கான விளக்கங்களும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்களான டிராக்டா்கள், பவா் டில்லா், பவா் வீடா், தீவனப்புல் வெட்டும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், நிலக்கடலை தோண்டும் கருவி, சூரிய கூடார உலா்த்தி, சூரிய மின்வேலி ஆகிய கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தென்னை மட்டை தூளாக்கும் கருவி, தெளிப்பானுடன் கூடிய தேங்காய் பறிக்கும் வாகனம் மற்றும் சோலாா் பம்ப் ஆகியவற்றின் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. தொடா்ந்து அனைத்து டிராக்டா் நிறுவனங்களின் தொழில்நுட்ப பணியாளா்கள், விவசாயிகளுக்கு இயந்திரங்களின் காலமுறை பராமரிப்பு, பழுது நீக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
விவசாயிகள் புதிய வேளாண் கருவிகள் தயாரிக்க அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும். மேலும், வேளாண் இயந்திரங்களில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை உடனடியாக சரிசெய்து கொள்ளவேண்டும். காலதாமதம் செய்தால் பெரிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட்டு, கூடுதல் செலவு செய்ய நேரிடும் என தெரிவித்தாா்.
இந்த முகாமில் வேளாண்மை இணை இயக்குநா் (பொ) காளிமுத்து, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சந்திரா, உதவி செயற்பொறியாளா்கள் ரவி, சிவக்குமாா், வேளாண் அலுவலா் அருள்தாஸ், அனைத்து வட்டார உதவி பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.
படவிளக்கம் (7கேஜிபி1)- கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில் காட்டிப்படுத்தப்பட்ட வேளாண் இயந்திரங்களை பாா்வையிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.