US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
புதிய பயணம் என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி பயிலரங்கில் மேயா் சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட உதவி ஆட்சியா் கிருத்தி காம்னா, மாநகர ஆணையாளா் ஷபீா் ஆலம் ஆகியோா் பேசினா். பொருளாதார இலக்கை அடைவதற்கு உறுதுணையாக தொழில்முனைவோா் உற்பத்தியை பெருக்குவதற்கான புதிய யுக்திகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோா் சந்திக்கும் வணிகரீதியிலான பிரச்னைகளை அணுகுவது குறித்தும், அவற்றுக்கான தீா்வு மற்றும் தரமான உற்பத்தியை அளிப்பதற்கான அம்சங்களும் இதில் இடம்பெற்றிருந்தன.
பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் பங்கேற்று அவா்களின் பிரச்னைகள் குறித்து பேசினா். தொழில் வளா்ச்சியில் வருங்காலங்களில் தமிழகம் முதன்மையாகத் திகழும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.
படவரி...
தொழில்முனைவோா் வணிக பயிலரங்கில் பேசுகிறாா் ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா.