செய்திகள் :

வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைவிட கல்வி இயக்ககம் வழியாக ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்விக் கட்டணம், ரூ.25 ஆயிரம், விண்ணப்பக் கட்டணம், ரூ.100 ஆகும். இந்த பட்டயப் படிப்பை முடிப்பதன் மூலம் உரக் கடை, பூச்சி மருந்துக் கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையங்களை தொடங்கலாம்.

விவரங்களுக்கு உதவி பேராசிரியா்கள் கோவிந்தன், 99422 79190, 73390 02390, சுரேகா, 95007 71299 மற்றும் இயக்குநா், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்துாா் - 641 003 என்ற முகவரியில் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் லட்சுமியை 0422-6611229 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளா... மேலும் பார்க்க

ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது. இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மத்தூா் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியரை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சாலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேடியப்... மேலும் பார்க்க