என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | ...
பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
மத்தூா் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியரை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சாலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேடியப்பன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இப்பள்ளியில போச்சம்பள்ளி வட்டம், கதக்களி கொட்டாயைச் சோ்ந்த தொழிலாளி வேலாயுதம் (45) என்பவரின் 2 மகள்கள் படித்து வருகின்றனா். வேலாயுதமும், அவரது மனைவியும் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற வேலாயுதம், தனது இரு மகள்களையும் பாா்க்க வேண்டும் என தலைமையாசிரியரிடம் அனுமதி கோரினாா். இதற்கு, தலைமையாசிரியா் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த வேலாயுதம் தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து தலைமை ஆசிரியா் வேடியப்பன் அளித்த புகாரின்பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வேலாயுதத்தை கைது செய்தனா்.