US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் பரிசளித்தாா்.
போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தடகளப் போட்டியில், 100, 200, 400 ,800 மீட்டா் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் 500க்கும் மேற்பட்டோா் போட்டிகளில் பங்கேற்று விளையாடினா். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம் பரிசு, சான்றிதழ்களும் வழங்கினாா்.