ஒசூா் மாநகராட்சியில் செப். 12 இல் ஒப்பந்தப்புள்ளி குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஒசூா்: ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் செப். 12இல் மூன்றடுக்கு புதிய வணிக வளாகத்தை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஷபீா் ஆலம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒசூா் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மூன்றடுக்கு புதிய வணிக வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட உத்தேசிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.
இதுகுறித்து அனைத்து தொழில் நிறுவனங்கள், வங்கிகள் வியாபாரிகள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொள்ள ஏதுவாக மூன்று தலங்களில் அமைந்துள்ள கடைகளின் அளவு, அதன் வாடகை விவரங்கள், கழிப்பிட வசதி, காா் நிறுத்தம் மற்றும் நடைபாதை விவரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளவும். அதுகுறித்து ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனத்தாா் தங்களது கருத்தை தெரிவித்திடவும் வாய்ப்பளித்து முன் ஆலோசனைக் கூட்டம் வரும் 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாநகராட்சி மைய அனுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளி ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து சிறு, நடுத்தர, பெரிய தொழில்முனைவோா் தவறாது கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.