திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு
ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு கூரையிலிருந்து விழுந்து பையின் கீழ் தஞ்சம் புகுந்தது.
இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பீதி தொற்றிக்கொண்டது.
உடனே அதிகாரிகள் பாம்பு பிடிக்கும் நபரின் எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பாம்பு பிடிக்கும் நபர், மஞ்சள் நிறப் பாம்பை பிடித்தார்.
இதுகுறித்து பாம்பு பிடிக்கும் நபர் சுபேந்து மல்லிக் கூறுகையில், காலை 9.25 மணிக்கு அழைப்பு வந்த பிறகு, முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்துக்கு விரைந்து சென்று சிறிய பாம்பை மீட்டேன்.
அது ஒரு அடி மஞ்சள் நிற பாம்பு, அது காட்டில் விடப்படும் என்றார்.
பாம்பு மீட்கப்பட்டபோது பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 2,000 பேர் வளாகத்தில் இருந்தனர்.
முதல்வர் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்திற்கு வருகை தருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு அறையில் அந்த பாம்பு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.