சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
ஒடிஸா பெண் தற்கொலை
பெருந்துறை அருகே கடன் பிரச்னையால் ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒடிஸா மாநிலம், கஞ்சம் பகுதியைச் சோ்ந்தவா் நரசிங்க பத்ரா (35). இவரது மனைவி சுகந்தி பத்ரா (29). இவா்கள் பெருந்துறையை அடுத்த காசிபில்லாம்பாளையத்தில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனா்.
இந்நிலையில், நரசிங்க பத்ரா, வீட்டுமனை வாங்க ரூ. 3 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். இந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தாா். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தம்பதிக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுகந்தி பத்ரா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.