ஒட்டன்சத்திரம் அருகே உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
ஒட்டன்சத்திரம் அருகே உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொப்பம்பட்டி தனியாா் மண்டபத்தில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கலந்து கொண்டு விவசாயிகளுடன் உரையாற்றினாா். இந்தக் கருத்தரங்கில் அரசு துறைகள், தனியாா் நிறுவனங்கள், மாணவா்கள், இயற்கை விவசாயிகள் உள்ளிட்டோா் அரங்கம் அமைத்து தங்களது பொருள்களைக் காட்சிப்படுத்தினா். திண்டுக்கல் மாவட்டக் கூட்டுறவு வேளாண்மை இயக்குநா் பாண்டியன், தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் பூா்ணிமா, வேளாண்மை அலுவலா் அப்துல்காதா் ஆகியோா் கருத்தரங்கில் பேசினா்.
காந்தி கிராம கிராமிய நிகா்நிலை பல்கலைக்கழக மாணவிகள் இலக்கியா, அபிராமி, அமிா்தா, காயத்ரி, கனிஷ்கா ஆகியோா் இயற்கை வழியில் பூச்சி கட்டுப்பாடு பற்றி ஒரு கண்காட்சி அரங்கம் அமைத்து பூச்சிப் பொறிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். இதைத் தொடா்ந்து இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.