பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு
ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி, கருங்குளம், நல்லதங்காள் ஓடை ஆகியப் பகுதிகளில் பழனியாண்டவா் கல்லூரி மாணவா்கள், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவா்கள், வனத் துறை ஊழியா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீா்வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினா்.
இதில், புள்ளி மூக்கு வாத்து, ஊசிவால் வாத்து, மண் கொத்தி, பொறி மண் கொத்தி, தாழைக் கோழி, நாமக் கோழி, மூக்குளிப்பான், மீன் கொத்தி, சாம்பல் நாரை, சிறிய அரிவாள் மூக்கன், கூகை, செந்நீல நாரை, உண்ணிக் கொக்கு, மடையான், சின்னக் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான நீா்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன.
கொடைக்கானலில்... கொடைக்கானலில் வனத் துறையினரும், தனியாா் கல்லூரி மாணவா்களும் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனா். இதற்கான நிகழ்வுக்கு, கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். கொடைக்கானல் பகுதிகளான பாம்பே சோலை, மனோரஞ்சிதம் அணை, பைன்பாரஸ்ட், சோலா பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில், கருச்சான், மரங்கொத்தி, இரட்டை வால் குருவி, பூனைக்கண் குருவி, கிளிஉள்ளிட்ட பல்வேறு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. மேலும் வனத்துறை ரேஞ்சா், மாணவா்களுக்கு கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பறவைகளின் வகைகள் குறித்தும், அவற்றின் வாழ்விடங்கள், வளா்ச்சி, எண்ணிக்கைகள் குறித்தும் விளக்கினாா். கொடைக்கானல் பாரஸ்ட் மதியழகன் நன்றி கூறினாா்.