செய்திகள் :

ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்

post image

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸின் மக்களவை குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் ஒரே எண்ணை கொண்ட வாக்காளர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேர்தல் ஆணையம் தவிர்த்து வருவதாக அவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.

இதேபோன்று, மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட சட்டப்பேரவை தேர்தல்களிலும் முறைகேடு நடைபெற்றதாக அவர் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை அபிஷேக் பானர்ஜி பேசியதாவது:

“தில்லியில் நேற்று ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் போராட்டம் நடத்திய பெண் எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்களிடம் தில்லி காவல்துறையினர் நடந்துகொண்ட விதம், தேர்தல் ஆணையத்தின் பயத்தை தெளிவாகக் காட்டுகிறது.

குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரே எண் (EPIC) கொண்ட வாக்காளர்கள் எப்படி இருக்கிறார்கள்? வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் ஒரே பெயரில் வாக்காளர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதற்கு பதிலளியுங்கள்.

வாக்காளர் பட்டியலில் பிழை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதே பட்டியலின் அடிப்படையில்தான், நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், 240 பாஜக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முறைகேடு இருந்தால், முழு மக்களவையையும் மத்திய அரசையும் கலைக்க வேண்டும்.

நீங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் தொடருங்கள். ஆனால், முதல் படி மக்களவையைக் கலைப்பதாக இருக்க வேண்டும். குஜராத்தில் வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதாகவும் மேற்கு வங்கத்தில் திருத்தம் தேவையென்றும் கூறுகிறீகள். சிறப்பு திருத்தம் மேற்கொண்டால் நாடு முழுவதும் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

The entire Lok Sabha should be dissolved: Trinamool Congress

இதையும் படிக்க : பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உ... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி

தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனை... மேலும் பார்க்க

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாநில வக்ஃ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க