செய்திகள் :

`ஒருபக்கம் விலகல்... மறுபக்கம் தேர்தல் பணி..!’ - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சி-யில்?

post image

கட்சியிலிருந்து விலகி, தலைமை மீது சேற்றைவாரி வீசி விட்டு மாற்று முகாமில் முக்கிய நிர்வாகிகள் இணைவது நா.த.க-வினரை உளவியல் ரீதியாக பாதித்திருக்கிறது. இந்த பின்னடைவிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகள் சீனியர் நிர்வாகிகள் மேற்கொண்டிருப்பதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கிறார் கட்சியினர். அரசியல் சுழலில் பாதிக்கப்பட்ட நா.த.க-வில் நடக்கும் மீட்பு பணிகள் குறித்து விசாரித்தோம்.

சின்னம் முடக்கம், என்.ஐ.ஏ ரெய்டு, பொருளாதார சிக்கல், மீடியா பலம் எனப் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் போராடி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் திருப்தியை தந்தது. ஆனால் அந்த உற்சாகம் உட்கட்சி விவாகரங்களால் வெகு நாள்கள் நீடிக்கவில்லை. காளியம்மாள் உள்ளிட்டோரை விமர்சிப்பதாக வெளியான ஆடியோக்கள், மண்டல. மாவட்ட பொறுப்பாளர்களின் தொடர் விலகல், ஒதுங்கிக் கொள்ளும் மாநில நிர்வாகிகள் என கருமேகங்கள் சூழ்ந்துகொண்டன.

சீமான் - காளியம்மாள்

இதுபற்றியெல்லாம் தலைமை கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை என்றாலும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தின. மேலும் நா.த.க கூடாரத்தை காலி செய்ய கங்கணம் கட்டி ஆள் தூக்கும் வேலைகளை அறிவாலயம் துரிதப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள் நா.த.க-வினர். ஆனால் அதேசமயம் `போனது போகட்டும்’ என பிரச்னைகளை சரிசெய்யும் வேலைகளை மும்முரமாக்கியுள்ளது சீமான் தரப்பு.

நம்மிடம் பேசிய கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் ``தி.மு.க-வின் இந்த ஆள் தூக்கும் நடவடிக்கைகள் உண்மையான தொண்டர்களை அடையாளம் காட்டிவிட்டது. மேடைகளில் வசனம் பேசினாலும் கட்சிக்கு இதுவொரு ஆபத்தான காலம்தான். மாவட்ட, மண்டல செயலாளர் விலகல் என்பதை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாதுதான். இருந்தாலும் பாதிப்புகளை சீர்செய்யும் உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். முன்பைவிட காலியாக உள்ள பொறுப்பாளர் பதவிகளை விரைந்து நிரப்புகிறோம். பலர் விலகுவதாக செய்திகள் வந்தாலும் இன்றைய தேதியில் மாவட்டச் செயலாளர்கள் இல்லாத தொகுதிகளே கிடையாது.

கலந்தாய்வு கூட்டங்களில் சீமான்

அதேபோல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திட பூத் கமிட்டி மற்றும் கிளையை கட்டமைக்கும் நடவடிக்கைகளும் மும்முரமாக நடக்கிறது. அதுபோக, கட்சியில் இணைவோரின் எண்ணிக்கையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் டிசம்பர் 29-ம் தேதி ஒரே நாளில் 1,000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் ஆயத்தமாகிறது கட்சி. சோர்ந்துபோன ஆதரவாளர்களையும் புத்துணர்வூட்டும் விதமாக அமைவதோடு விவாத கருத்துருவாக்கங்களை உடைக்கும் என நம்புகிறோம்” என்றனர்.

கலந்தாய்வில் சீமான்

தொடர்ந்து பேசியவர்கள் ``2026 சட்டமன்ற தேர்தலுக்கு மாவட்ட நிர்வாகிகளை தயார் செய்யும் பொருட்டு மாவட்ட கலந்தாய்வுகளை தொடங்கி நடத்தி வருகிறார் சீமான். 100 முதல் 120 தொகுதிகள் வரையிலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். குறிப்பாக தென்மாவட்டங்களில் மரிய ஜெனிபர் குமரி தொகுதியில் சட்டமன்ற அலுவலகமே தொடங்கிவிட்டதோடு குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளும் விழிப்புடன் செயல்படுகின்றன. அதேபோல் டெல்டா முழுக்க கட்சியின் ஸ்டார் வேட்பாளர்கள் களமிறங்கிவிட்டார்கள். இடும்பாவனம் கார்த்திக், துரைமுருகன், பாத்திமா பர்கானா, காளியம்மாள், அனீஷ் பாத்திமா உள்பட ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களும் களமிறங்க ஆயத்தமாகிறார்கள்” என்றார்.

குமரி வேட்பாளர் மரிய ஜெனிபர்

அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, ``நா.த.க எந்தளவுக்கு வேலையை துரிதப்படுத்துகிறதோ அதே அளவுக்கு கட்சியிலிருந்து ஆள் தூக்கும் திட்டத்தோடு அறிவாலயமும் வேகமெடுக்கிறது. எனவே தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்துவதை போல வெளியேறும் மனநிலையிலுள்ள நிர்வாகிகளை ஆஸ்வாசப்படுத்துவதோடு.. `என் கட்சி என் கட்சி` என இருமாப்பு கொள்வது, `விருப்பம் இருந்தால் இரு. இல்லைனா வெளியே போ` என கொதிப்பதை தவிர்ப்பதே நல்ல தலைமைக்கு அழகு. அதை சீமான் செய்ய தொடங்கிவிட்டால் சரிவிலிருந்து உறுதியாக நா.த.க மீளும் என்பதே கட்சியின் முக்கிய புள்ளிகளின் கருத்து” என்றனர்.

CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' - தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி 'நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருத... மேலும் பார்க்க

Trump: ``இந்தியா அதிக வரி விதிக்கிறது; நாங்களும் அப்படிச் செய்தால்..." - இந்தியாவை சாடிய டிரம்ப்!

வரும் ஜனவரி மாதம், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவரிடம் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க

Pan 2.0 - `பழைய பான் கார்டை கட்டாயமாக மாற்ற அவசியமில்லை' - என்ன சொல்கிறது அரசு?!

ஒரு திட்டம் புதியதாக வந்தால், உடனே அது சம்பந்தமான மோசடியும் முளைத்து விடுவது லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது. பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள், அத... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்த விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்; முகாமிடும் சமூக விரோதிகள்- சீரமைக்க கோரும் மக்கள்

திருப்பத்தூர் அடுத்த மடவாளத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்குமேல் ஆகிறத... மேலும் பார்க்க

திருவொற்றியூர்: அம்மா உணவகத்துக்கு சீல்; போராட்டத்தில் இறங்கிய அதிமுக-வினர்! - என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த அம்மா உணவகக் கட்டடம், கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.ச... மேலும் பார்க்க

``பழிவாங்குகிறார்கள்.." - மீண்டும் வெடிக்கிறதா சாம்சங் ஊழியர்கள் போராட்டம்! - என்ன சொல்கிறது CITU?

சாம்சங் ஊழியர்கள் நடத்திய போராட்டம்அதிகாரப்பூர்வ தொழிற்சங்கம் இல்லாமல் வேலை செய்துவந்த சாம்சங் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி போராட்டத்தை முன்னெடுத்தனர். சாம்சங் ஊழ... மேலும் பார்க்க