கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
ஒரு சொல்; ஒரு படம்; ஒரு சம்பவம்... கண்களை கலங்க வைக்கும் சில நிமிடங்கள்! | My Vikatan
2024 முடிந்து 2025 ம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. இப்படியும் கூட மனங்களா என யோசிக்க வைக்கும் சில விநோதமான வாழ்வியல் நிமிடங்களை இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.
அனுபவிக்க தயாராக வாருங்கள் செல்வோம்..
அன்றைய முதல்வர் காமராஜருக்கு செல்லும் வழியில் சென்னை தாம்பரத்தில் ஜீவாவின் வீடு இருப்பது தெரியும். அந்த பள்ளி விழாவிற்கு ஜீவாவையும் அழைத்துச் செல்வதே முறை, ஏனெனில் அந்த பள்ளியின் அடிக்கல் நாட்டியவர் ஜீவாதானே என்று நினைத்த காமராஜர் தன் வண்டியை ஜீவா வசிக்கும் வீட்டிற்கு விடச் செல்லி ஜீவாவின் வீட்டிற்கு சென்றவர், வண்டியில் இருந்து இறங்கி ஜீவாவை நேரில் கண்டு " நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர்.
"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்"; என்று ஜீவா மறுக்க,"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப்போக, கிளம்பு போகலாம்" என்றார், காமராஜர்.
"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல அங்கே வந்துடுறேன்" என்று ஜீவா காமராஜரை கிளம்பச் சொல்லிவிட.."கண்டிப்பாக நீ வரணும்!" என்றபடி கிளம்பிச் சென்றார் காமராஜர்.
விழாவுக்கு, அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக ஜீவா வருகை தர
"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?" என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொள்ள.. ஜீவா, "அட நல்ல... வேட்டி ஒண்ணு தாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதனாலதான் லேட்டாகிடுச்சு ,தப்பா நினைச்சுக்காதே" என்று ஜீவா காமராஜரிடம் கூறிட ஜீவாவின் வாழ்வியல் கண்ட காமராஜரின் கண்கள் கலங்கியது.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரா ராஜேந்திர பிரசாத் அவர்கள் அன்றைய பீகார் மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் குடிசைப்பகுதியில் ஓட்டுக் கேட்டுக் கொண்டே செல்கிறார்.
ஒரு குடிசையின் முன்பாக நின்று கொண்டிருந்த ஒரு ஏழைப் பெண்னை கண்டு அவரிடம் ஓட்டுக் கேட்க, குடிசை வீட்டுக்குள் இன்னும் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்த ராஜேந்திர பிரசாத் அவரிடமும் ஓட்டுக் கேட்க வேண்டும் வரச் சொல்லுங்கள் என்று நிற்க , சற்று பொறுங்கள் என்று குடிசைக்குள் செல்ல ஓரிரு நிமிடங்களில் மகள் வெளியில் வருகிறார்.
இருவரையும் ஒரு சேரக் கண்டு ஓட்டுக் கேட்க வேண்டும் என்று நினைத்தார் ராஜேந்திர பிரசாத் அவர்கள்.
மகள் உள்ளே சென்ற ஓரிரு நிமிடங்களில் அம்மா வருகிறார். இருவரும் ஒன்றாக வாருங்கள் என்று கூறிட ஓரிரு நிமிடங்களில் புரிகிறது இருவருக்கும் இருப்பது ஒரே ஒரு புடவைதான் என்பது. இப்படியாக மாற்று உடை என்பதே இல்லாத வாழ்வியல் கொண்டவர்கள் வாழ்ந்த நாடு இது.
அல்பேனியா நாட்டில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து இந்திய குடியுரிமை பெற்று அமைதிக்கான நோபல் பரிசை பெற்று புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரேசா அவர்கள் கருணையின் வடிவமென வாழ்ந்த அன்னை தெரேசா கொல்கத்தாவில் எண்ணற்ற தொழு நோயாளிகளை தன் ஆதரவு இல்லத்தில் வைத்து கனிவுடன் கவனித்து வந்த காலம் அது.
அவர்களின் நலன் பேண மக்களிடம் உதவிகளை பெற்று வந்த அன்னை தெரேசா அவர்கள் ஒரு நாள் ஒருவரிடம் சென்று ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்க, அடுத்த நொடியே அவர் கோபத்துடன் ஏதும் இல்லை என்று கூறி எச்சிலை காறி உமிழ்ந்திட, அன்னை தெரேசா அவர்கள் புன்னகையுடன் அவர் காறி உமிழ்ந்திட்ட எச்சிலை துடைத்துக் கொண்டு, அவரிடமே, ' இதனை எனக்கான பரிசாக எடுத்துக் கொள்கிறேன்... அந்த ஆதரவற்ற தொழு நோயாளிகளுக்கு ஏதேனும் உதவுங்கள்' என்று மறுபடியும் அவரிடம் கையேந்திட அடுத்த நொடியே அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொழு நோயாளிகளுக்கு என்று உதவி செய்திட முன் வந்தாராம்.
கனிவான அன்புதான் உன் பலவீனம் என்றால் உலகின் மிகப்பெரிய பலசாலி நீதான் எனும் அன்னை தெரேசா அவர்களின் கூற்று மெய்யான நிமிடங்கள் அது.
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் " எனும் வள்ளலார் கூறியதாக படிக்கும் பலருக்கும் தோன்றலாம் பயிர் ஒன்று வாடி நிற்பதை கண்டால் மனிதரின் மனமும் முகமும் வாடிப் போகுமா! என்று.
" இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் முக்கியமானவர் "ஃப்ரட்ரிக் நீட்சே" (Friedrich Nietzsche) "கடவுள் இறந்துவிட்டார்" எனும் அவரது ஒற்றை வாக்கியம் மேற்கத்திய உலகையே ஆட்டிப்படைத்தது .
அவர் ஒரு நாள் சாலையில் சென்று கொண்டிருந்தாராம் . அப்போது நமது ஊரில் கட்டை மாட்டு வண்டியில் பாரம் ஏற்றிக் கொண்டு எருதுகள் வருவது போல் குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி எதிரே வந்தது.
வண்டியின் அதிகமான பாரத்தினால் வண்டியினை இழுக்க முடியாமல் குதிரைகள் திணறின. வண்டிக்காரனோ, பிரம்பினால் குதிரைகளை விளாசினான்.
பதறிப் போன நீட்சே ப்ரடெறிக் 'தயவுசெய்து குதிரைகளை அடிக்காதே " என்று பரிதவிப்புடன் தடுத்தார். பதற்றத்திலும் படபடப்பிலும் அவருடைய மூளை நரம்புகள் வெடித்து, மனநிலை தவறியது. மனநிலை தவறிய நிலையிலும் நீட்சே எழுதிய இரண்டு புத்தகங்கள் உலகப் புகழ்பெற்றவை. வள்ளலார் மனம் படைத்த மனிதர்கள் உலகமெங்கும் உண்டு.
ஆப்பிரிகாவின் விரக்தியும் - கெவின் கார்ட்டரின் குற்ற உணர்வும்.
வறண்ட தேசம் என்று உங்களைக் கற்பனை செய்யச்சொன்னால் எல்லோர் மனதிலும் வரும் சித்திரம் கண்டிப்பாக ஆப்பிரிக்காவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அதன் பாதிப்பு நமக்குள் இருக்கும். 1993-ம் ஆண்டு, 'நியூயார்க் டைம்ஸ்' இதழில் வெளியான இந்தப் புகைப்படத்தின் தாக்கம்தான் அது.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் பேராசையால் வளங்கள் சுரண்டப்பட்டு, போரால் நிர்க்கதியாக ஆக்கப்பட்ட ஆப்பிரிக்கா, சோமாலியா, கென்யா, சூடான் போன்ற நாடுகளில் மக்கள் பஞ்சத்தால் வாடும் நிலையைக் காட்டியது இந்தப் புகைப்படம்.
தன்னை இரையாக்க வரும் கழுகினைக்கூட விரட்ட முடியாமல் சுருண்டு விழுந்துக் கிடக்கும் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து இந்த உலகமே கொதித்து எழுந்தது. அதை எடுத்த புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டருக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அவலத்தை ஆவணப் படுத்திய தான் அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தவறி விட்டேனே என்ற குற்ற உணர்வு மேலிட அந்தப் புகைப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார்.
குழந்தைகள் கொண்டு வரும் செய்தியும், தீவிரவாதத்தின் பதிலும்
இந்த உலகில் எத்தனை முறை பார்த்தாலும் சலிகாதவை என்று யானை, ரயில் வண்டி, முழு நிலவு, கடல் மற்றும் குழந்தையின் புன்னகை என்பர்.
இந்த உலகிற்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் இறைவன் இன்னும் மனித குலத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை எனும் செய்தியுடன் தான் வருகிறது என்பர்.
ஆளுக்கொரு உலகுடன்
பயணிக்கும் அனைவருக்கும்
தன் உலகையே
பரிசளித்து செல்கிறது
தன் மந்திர புன்னகையால்
குழந்தை.
இப்படியாக குழந்தைகளின் உலகமே அலாதியான அழகானது....
பிரபலம் ஒருவரை கண்டால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவது அந்த காலம், அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்வது இன்று. இப்படியாக மொபைல் போன் கேமரா மூலம் படமெடுக்க தயாரானாலே உடனே குழந்தைகளின் புன்னகை பூக்கும் முகம் தயாராகி விடும். ஆனால் கேமராவை கொண்டு படமெடுக்க தயாரானாலே, அந்த கேமரா ஒரு துப்பாக்கி... அதனை கொண்டு சுட்டுக் கொல்லப் போகிறார் என பயந்து குழந்தை தன் இரு கைகளையும் உயர்த்தி சரணடைவது போல் நின்றால் எப்படி இருக்கும்.. என்ன மாதிரியான விநோதமான சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அப்படியாக தன் பயத்தை வெளிப்படுத்த இயலும்
கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. காட்சியைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.
சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப் பழகிய இந்தக் குழந்தை, படம்பிடிக்க கேமராவைச் சரிசெய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சி இது. சிரியாவின் துயரத்தை விளக்க இந்த ஒரு படம் போதும்.
- வீ.வைகை சுரேஷ்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...