திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்..! தனக்குத்தானே போட்டியாக மாறிய பிரதீப்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.
தீபாவளியை முன்னிட்டு இவரது டூட், எல்ஐகே ஆகிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.
கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தில் அவரே நாயகனாக நடித்ததால் நடிகராகவும் பிரபலமானார்.
டிராகன் படமும் அவரது நடிப்பில் ஹிட் அடித்தது. தற்போது, இவரது நடிப்பில் எல்ஐகே (லவ் இன்சுரன்ஸ் கம்பெனி), டூட் எனும் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன.
இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐகே படத்தை இயக்கியுள்ளார். இதில், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் டூட் படத்தை இயக்கியுள்ளார். இதில், நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் தீபாவளியை முன்னிட்டு அக்.17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதுவரை ஒரே நடிகரின் இரண்டு படங்கள் திருவிழா காலங்களில் வெளியானதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தப் படங்கள் வெளியானால் நடிகருக்கு பிரச்னையல்ல, தயாரிப்பு நிறுவனங்கள்தான் யோசிக்க வேண்டுமென சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.