நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலி...
ஒரே நாளில் 3 விதமாக காட்சியளிக்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்! - சிலிர்ப்பனுபவம் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இது கொச்சி தேவஸ்தானம் வாரிய நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கபட்டு வருகிறது. இங்கு மேலக்காவு மற்றும் கீழ்க்காவு என இரண்டு கோவில்கள் உள்ளது. நாம் உள்ளே நுழைந்தவுடன் முதலில் பார்ப்பது மேலக்காவு ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் அதன் பின்னால் சற்று தாழ்வான உயரத்தில் குளத்தின் அருகே மேற்கு நோக்கி உள்ள கோயில் கீழக்காவு பத்ர காளி அம்மன் கோவில்.

கோவிலின் சிறப்பு:
மேல்க்காவூ கோவில்
மேல்க்காவூ கோவிலில் ராஜராஜேஸ்வரி அம்மனாக காட்சியளிக்கிறாள். அன்னை பகவதி ஒவ்வொரு நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள் காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும், மாலையில் சௌபாக்கியம் தரும் அன்னை மகாலட்சுமியாக ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
ஒரே பீடத்தில் மகாவிஷ்ணுவின் சிலை உள்ளது, எனவே பகவதி அம்மனை அம்மேநாராயணா, தேவிநாராயணா, லட்சுமிநாராயணா மற்றும் பத்ரேநாராயணா என்றும் அழைக்கப்படுகிறது. மேலக்காவு கோவிலில் லட்சுமி, நாராயணாவுடன் பிரம்மா, சிவன், கணபதி, சுப்பிரமணியர் மற்றும் சாஸ்தா ஆகியோரின் சிலைகளும் ஒரே பீடத்தில் உள்ளன.

கீழ்க்காவு கோவில்
கீழ்க்காவு கோவிலில் துர்க்கை வடிவில் (பத்ரகாளி) அம்மனாக காட்சியளிக்கிறாள். இந்த கீழ்க்காவு துர்க்கை அம்மன் பக்தர்களிடமிருந்து தீய சக்திகளை விரட்டுவதாக நம்பப்படுகிறது, மேலும் இங்கு செய்யப்படும் குருதி பூஜை சிறப்பு வாய்ந்தது,மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் நிவாரணம் பெற இங்கு தேடி வருகிறார்கள்.
கருவறையின் வடகிழக்கு பக்கத்தில் நிற்கும் ஒரு பழங்கால பாலா மரம் நீண்ட இரும்பு ஆணிகளால் அடிக்க பட்டு இருக்கும் , இங்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் குணமடைய இந்த பூஜை செய்யப்படுகிறது.கீழ்க்காவு கோவிலில் துர்க்கை அம்மன், சாஸ்தா, சிவன், கணபதி, நாகர்கள் மற்றும் பிற உப-தேவர்களுக்கான கோயில்கள் உள்ளன.

கோவிலின் திருவிழாக்கள்:
கும்பம் மாதம்
கோயிலின் வருடாந்திர திருவிழா இந்த மாதத்தில் வருகிறது. கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 7 நாள்கள் நீடிக்கும். தினசரி பரா எழுநெல்லிப் பூவும், பின்னர் இந்த நாள்களில் ஆராட்டு நடத்தப்படும். உற்சவத்தின் போது, மாகோம் என்ற முக்கியமான நாள் வருகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான மகோம் தோழல் (தேவி தரிசனம்) மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் அம்மன் தங்கம் மற்றும் வைரங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு முழு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பாள். காலையிலும் இரவிலும் 7 யானைகளுடன் பூரம் எழுநெல்லிப் பூவும் நடைபெறும். உற்சவம் உத்திரம் ஆராட்டு மற்றும் வலிய குருதி (அத்தம் குருதி) பூஜைகளுடன் உடன் முடிகிறது.
கன்னி மாதம்
நவராத்திரி அகோஷம் என்பது ஒரு பிரபலமான விழா. நவராத்திரி உற்சவத்தின் விஜயதசமி நாளில், வித்யாரம்பம் நடத்தப்படுகிறது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவி முன்னிலையில் மூன்று பாடங்களான வாசிப்பு, எழுத்து மற்றும் எண்கணிதம் கற்பிக்கப்படுகிறது. துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி ஆகியவை மிகவும் முக்கியமானவை. யானை ஊர்வலம் உள்ளது. அன்னதானம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஏற்பாடு செய்யப்படும்.

விருச்சிகா மாதம்
விருச்சிக மண்டல மஹோத்ஸவம் (திருவிழா) மண்டல சீசன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தினசரி அன்னதானம், மேடை நிகழ்ச்சிகள், நாமஜபம் போன்றவை நடத்தப்படுகின்றன. இந்த மாதத்தில் திருக்கார்த்திகை திருவிழா வருகிறது. தேவியின் பிறந்தநாளான கார்த்திகை, ரோகிணி, மகாயிரம் ஆகிய மூன்று நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்நாள்களில் எழுநெல்லிப்பு, காட்சி சீவேலி, மேடை நிகழ்ச்சி, தீபாராதனை, கார்த்திகை விளக்கு, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி முதல் 15 நாள்களுக்கு லட்சார்ச்சனை, வேதமுரை அபிஷேகம் நடக்கிறது.
கார்கிடகம் மாதம்
இந்த காலகட்டத்தில் ராமாயண மாதம் (ராமாயண மாதம்) கொண்டாடப்படுகிறது. தினசரி புராண வாசிப்பு (ராமாயணம், பாகவதம் போன்றவை), தினசரி அன்னதானம், பக்தி உரைகள் மற்றும் சொற்பொழிவு போன்றவை நடத்தப்படுகின்றன - வருடத்தின் புதிய நெல் கடவுளுக்குப் படைக்கப்படும்.
சிங்கம் மாதம்
கோவிலில் திருவோணம் அனைத்து பக்தர்களுக்கும் திருவோண விருந்துடன் (அன்னதானம்) கொண்டாடப்படுகிறது.
மேடம் மாதம்
விஷு நாளில், 3 யானைகள் மீது விஷுகனி, விஷுசத்யா மற்றும் எழுநெல்லிப்பு நடைபெறும்.

கோவிலின் சிறப்பம்சங்கள்
பஜனம்!
பஜனம் என்பது பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் நடைபெறும் ஒரு சிறப்பு பூஜை. பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்தால் மட்டுமே பஜனம் கோர முடியும். இந்த முறை அவர்கள் கோவிலை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள். இந்த நேரத்தில் பக்தர்கள் உப்பு, மிளகாய் மற்றும் புளிப்பு உணவு சாப்பிடுவதில்லை. இந்த பஜனையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
மண்டபத்தில் பாட்டு!
மண்டபத்தில் பாட்டு என்பது தேவியின் ஆசிகளைப் பெறும் மற்றொரு பூஜை. வெண்கல விளக்குகள் மற்றும் பூக்கள் கொண்டு கோவில் அலங்கரிக்கபட்டு பக்தர்கள் சாடின் துணிகள், அலங்காரப் பொருட்கள், அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை தெய்வத்திற்கு வழங்குகிறார்கள். பிராமணி அம்மா பாட்டு பக்தி பாடல்கள் இடம்பெறும். வழிபாட்டிற்குப் பிறகு அவர்களுக்கு சதுஷ்சாதம் கிடைக்கும். இது ஒரு வகையான இனிப்பு பானம்.

வலிய குருதி பூஜை!
கீழ்க்காவு கோயில் அத்தாழ பூஜைக்குப் பிறகு (மாலையில் முக்கிய பூஜை), பிரபலமான மற்றும் பெரிய பூஜையான "வலியகுருதி" (பெரிய யாகம்) செய்யப்படுகிறது. குருதி 12 கொப்பரைகளில் (பெரிய பாத்திரம்) தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு இரவும் சுமார் இரவு 8.45 மணிக்கு நடைபெறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு நீங்க இந்த யாகத்தில் கலந்து கொள்வார்கள்.
நித்யத வாழிபாடு!
சோட்டானிக்கரை பகவதி கோயிலில் பக்தர்களுக்காக கொச்சி தேவசம் போர்டு "நித்யதா" (தினசரி வழிபாட்டு முறை) என்ற புதிய வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு பக்தர் தனக்கு ஒதுக்கப்பட்ட தேவசம் லெட்ஜர் கணக்கில் தவறாமல் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தத் தொகையையும் செலுத்தலாம்.

பக்தர்களின் வேண்டுகோளின்படி தேவசம் தினசரி / வாராந்திர / நட்சத்திர வாரியாக / அல்லது ஆண்டுதோறும் வழிபாட்டு முறையை நடத்தி, பிரசாதம் அவருக்கு விநியோகிக்கப்படும்.
கோவிலின் வழிபாட்டு நேரம்
திங்கட்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45
செவ்வாய் கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45
புதன்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - காலை 04:00 - மதியம் 12:00
வியாழக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45
வெள்ளிக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45
சனிக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45
ஞாயிற்றுக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45
கோவிலுக்கு செல்லும் வழி
விமானம் மூலம் :-
இந்த கோயில் கொச்சி விமான நிலையத்திலிருந்து 38 கி.மீ தொலைவில் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும்
பயண வழி :- கொச்சி விமான நிலையம்-களமசேரி–காக்கநாடு–இரிம்பனம்– கரிங்காச்சிரா -சோட்டானிக்கரா

ரயில் மூலம் :-
கோயிலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் திருப்புனித்துரா ரயில் நிலையம் ஆகும். இது கோயிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோயில் எர்ணாகுளம் தெற்கு மற்றும் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இந்த நகரத்தை நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
தெற்கு ரயில் நிலையம் :– வைட்டிலா–திரிபுனித்துரா–திருவாங்குளம்-சோட்டானிக்கரா
வடக்கு ரயில் நிலையம் :– பாலரிவட்டம்-வைட்டிலா-திரிபுனித்துரா-திருவாங்குளம்-சோட்டானிக்கரா
சாலை வழியாக :-
எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் பயணம் செய்து திருவங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் செல்லலாம். இது கலூர் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பயண தடம் :-
KSRTC பேருந்து நிலையம் – வைட்டிலா- திரிபுனித்துரா- திருவாங்குளம்- சோட்டானிக்கரா
கலூர் தனியார் பேருந்து நிலையம்-பாலரிவட்டம்-வைட்டிலா-திருப்புனித்துறை- திருவாங்குளம்-சோட்டானிக்கரா
தெற்கிலிருந்து வரும் பாதை :- அங்கமாலி – சோட்டானிக்கரா
வடக்கிலிருந்து வரும் பாதை :- அரூர் - சோட்டாணிக்கரை
இதை தவிர ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தனியார் கார்கள் கிடைக்கின்றன, இங்கு வாட்டர் மெட்ரோ ,மற்றும் ட்ரைன் மெட்ரோ வசதிகளும் உள்ளது
கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ளவேண்டியது
# பெண்களுக்கான சேலை அல்லது சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளுக்கு அனுமதி.
# ஆண்கள் சட்டை & பனியன் இல்லாத வேட்டி அல்லது கால்சட்டை மட்டும் அனுமதி
# பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்தியேக வரிசையில் செல்லலாம்.
# பக்தர்களுக்கு மதியம் கோவிலில் அன்னதானம் நடைபெறும்.
# தெற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடம், குளியல் அறை,கழிப்பறை வசதிகள் உள்ளது
# கோவில் நுழைவு வாயிலில் பொருள்கள் வைப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
# கோவில் அருகிலேயே உணவகங்கள்,தேநீர் விடுதி கடைகள் உள்ளது
# கோவில் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது.
# பக்தர்கள் முதலில் கீழ்க்காவு சென்று பின்னர் மேலக்காவு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது

கோவிலில் தங்கும் வசதி
கோவிலில் தங்கி வழிபாடு செய்ய விரும்புவோர்க்கு வசதியாக தேவஸ்தானம் போர்டு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அறைகளை வசதிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் செலுத்தியும் முன்பதிவு செய்தும் அந்த அறைகளில் தங்கி வழிபாடு செய்யலாம் .
அறைகள் முன்பதிவு செய்வதற்கு :-
விடுதி மேலாளர், சோட்டானிக்கரா தேவஸ்வம், சோட்டானிக்கரா,எர்ணாகுளம் மாவட்டம், கேரளா, பின் - 682 312.
தொலைபேசி :- 0484 - 2711032 , 2713300
மின்னஞ்சல் :- eo@chottanikkarabhagavathy.orgavathy & chottanikkaratemple@gmail.com
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.