செய்திகள் :

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' - விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

post image
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட விகடன் குழும ஆசிரியர்களுள் ஒருவரான அறிவழகன், இந்த விவகாரத்தில் விகடன் தரப்பு நியாயத்தை கூர்மையாக முன்னெடுத்து வைத்தார்.
ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் அறிவழகன் பேசியதாவது, "நம் வீட்டில் ஒரு துக்கமான சம்பவம் நடக்கும்போது, ஒரு வீட்டில் போய் விருந்து சாப்பிடுவோமா? அதுவும் அந்த துக்ககரமான சம்பவத்துக்கு காரணமானவர் வீட்டுக்கே சென்று விருந்து சாப்பிடுவோமா? இப்போது அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் கண்டித்துதான் அந்த கார்ட்டூன் வெளிவந்தது. இது விகடன் என்ற ஒரு தனிப்பட்ட பத்திரிகைக்கான எதிர்ப்பு அல்ல என்பதை பத்திரிகையாளர் மணி ஒரு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

எந்த தனிமனிதனும் முன்வந்து சுதந்திரமாக பேசக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே இது. இதற்கு எதிராக நாம் கிளர்ந்து எழ வேண்டும். அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.என்.ராம் அவர்கள் தன்னிச்சையாக பல ஆங்கில ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அறிவழகன்

விகடனுக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள பல பத்திரிகையாளர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இங்கே தன்னெழுச்சியுடன் பத்திரிகையாளர்கள் ஒற்றுமையோடு விகடனுக்கு துணையாக கூடியுள்ளதை பார்க்கையில் நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் உங்கள் எல்லோருக்கும் நன்றி" எனக் கூறினார்.

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில்... மேலும் பார்க்க

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க