செய்திகள் :

ஓடிடியில் ஸ்குவிட் கேம் - 2!

post image

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசன் இன்று ஓடிடியில் வெளியாகிறது.

பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேம் பாகம் 1 வெளியானது.

இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்.

இதையும் படிக்க: விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!

அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் யூகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. சமீபத்தில், இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், இத்தொடரின் இரண்டாவது சீசன் இன்று மாலை நெட்பிளிக்ஸ் ஓடிடிடில் வெளியாகவுள்ளது.

உப்பு புளி காரம் இணையத் தொடர் நிறைவு!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற உப்பு புளி காரம் இணையத் தொடர் விரைவில் நிறைவு பெற்றவுள்ளது. இதன் இறுதிநாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இத்தொடரின் நடித்த நடிகர்கள்... மேலும் பார்க்க

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல்!

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.‘ம... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிசம்பர் 13 - 19) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)வழக்குகள் சா... மேலும் பார்க்க

பிக் பாஸ்: விஷ்ணுவிடம் காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா!

பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர் விஷ்ணுவிடம் தனது காதலை செளந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார்.பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி 12-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்கள் வீட்டுக்குள... மேலும் பார்க்க

திருவெம்பாவை

திருவெம்பாவை – 12 ஆா்த்த பிறவித் துயா்கெட நாம் ஆா்த்தாடும் தீா்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வாா்த்தையும் பேசி வளை... மேலும் பார்க்க

திருப்பாவை

திருப்பாவை – 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் ச... மேலும் பார்க்க