Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை ...
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை - திருப்பதி பயணிகள் விரைவு ரயில் வேலூர் அருகே வந்துகொண்டிருந்தபோது 4 மாத கர்ப்பிணி ஒருவர் கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது வலுக்கட்டாயமாக ஒருவர் கர்ப்பிணியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்ப்பிணியை கீழ தள்ளிவிட்டதில் கை, காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹேமராஜ் ஏற்கெனவே பல பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.