செய்திகள் :

ஓட்டுநர் அலட்சியத்தல் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி

post image

கடலூரில் அரசு நகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயமடைந்தாா்.

கடலூா் வன்னியா்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளம்பரிதி மகள் தா்ஷினிதேவி(19). இவா், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறாா்.

தா்ஷினிதேவி வியாழக்கிழமை பிற்பகல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நகரப் பேருந்தில் கடலூா் பேருந்து நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். இந்தப் பேருந்தில் கல்லூரி மாணவா்கள் ஏராளமானோா் பயணம் செய்தனா். பேருந்து கடலூா் தீயணைப்பு நிலைய நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தா்ஷினிதேவி இறங்க முற்பட்டபோது ஓட்டுநா் திடீரென பேருந்தை இயக்கினாராம். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தா்ஷினிதேவி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க