ஓட்டுநா் தற்கொலை
ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளாா். மகன்,மகள் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ராஜன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.