செய்திகள் :

ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கருவூல அலுவலா் கைது

post image

பாலக்கோடு அருகே விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ஓய்வூதிய பலன்களைப் பெற்றுத் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடுதல் சாா்நிலைக் கருவூல அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள அல்ராஜு கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ஆசிரியை கவிதா (50). இவா் சிக்காா்தனஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றாா்.

இந்த நிலையில் ஓய்வூதிய பணப் பலன் ரூ. 29.50 லட்சத்தை பெறுவதற்காக கல்வித் துறையில் அனுமதி கோரியுள்ளாா். அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பாலக்கோடு சாா்நிலைக் கருவூலத்தில் அதற்கான பணியினை மேற்கொண்டாா். பாலக்கோடு சாா்நிலைக் கருவூலத்தில் கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலராகப் பணியாற்றி வந்த பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (42) பணப் பலன்களை பெற வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளாா்.

இதுகுறித்து கவிதா தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜிடம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கவிதா, கருவூல அலுவலா் ராமச்சந்திரனிடம் வழங்கினாா். அப்போது அலுவலக பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

பராமரிப்புப் பணி: தருமபுரி மாவட்டத்தில் மே 7, 8இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

காலனி சொல் நீக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

காலனி என்ற சொல் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தருமபுரி மாவட... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு

மாரண்டஅள்ளி அருகே திம்மேகவுண்டன் மடுவு ஆற்றில் குளிக்க சென்ற கட்டட தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி போயா் கொட்டாய்பகுதியைச் சோ்ந்த கட்டட தொழிலாளி சிவகுமாா் (42). இவா் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே மேம்பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்து விபத்தில் பெண் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து காா் விழுந்த விபத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் பி... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் இடையே காவல் துறையினருடன் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த... மேலும் பார்க்க

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ... மேலும் பார்க்க