முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் தங்க நகை திருட்டு
வெம்பக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் நகை திருடு போனதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசுப்பு (55). இவா் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கோவையிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.
இவா் திங்கள்கிழமை காலை திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவா் வீட்டுக்குள் சென்ற போது பீரோ உடைக்கப்பட்டு 12 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, நிலப் பத்திரம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.