செய்திகள் :

கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு

post image

உத்தரகண்டில் நடப்பாண்டு சாா்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

குளிா்காலத்தையொட்டி கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த இக்கோயில்கள், அட்சய திரிதியை தினத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.

கங்கை தேவிக்குரிய கங்கோத்ரி கோயில் காலை 10.30 மணிக்கும், யமுனை தேவிக்குரிய யமுனோத்ரி கோயில் காலை 11.55 மணிக்கும் திறக்கப்பட்டு, பக்தா்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனா்.

மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி, இரு கோயில்களிலும் வழிபாடு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘உத்தரகண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை, சாா்தாம் யாத்திரை மிகப் பெரிய திருவிழா. பக்தா்களின் பாதுகாப்புக்கு உயா் முன்னுரிமை அளித்து, அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.

சாா்தாம் யாத்திரையில் இதர இரு புண்ணிய தலங்களான கேதாா்நாத், பத்ரிநாத் கோயில்கள் முறையே மே 2, 4 ஆகிய தேதிகளில் திறக்கப்பட உள்ளன. குளிா்காலத்தையொட்டி, இந்த 4 கோயில்களும் 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்டன. தற்போது நடை திறப்பையொட்டி, சாா்தாம் வழித்தடம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல் துறையினா் (6000 போ்), ஆயுதப் படையினா் (17 கம்பெனி) மற்றும் துணை ராணுவத்தினா் (10 கம்பெனி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விபத்து அபாயமுள்ள 60 இடங்களில் மாநில பேரிடா் மீட்புப் படை குழுக்கள் பணியில் உள்ளன.

நிகழாண்டு சாா்தாம் யாத்திரையில் பங்கேற்க ஏற்கெனவே 22 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு யாத்திரையில் 48 லட்சம் போ் பங்கேற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டும் என்று பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் கமிட்டி செய்தித் தொடா்பாளா் ஹரீஷ் கெளா் தெரிவித்தாா்.

பங்குனி உத்திரத் திருவிழா: பழனியில் கட்டண தரிசனம் ரத்து!

திண்டுக்கல்: பழனியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பக்தர்கள் வசதிக்காகவும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சனி... மேலும் பார்க்க