உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தர...
கஞ்சா பயிரிட்டவா் கைது
வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத்திரிக்காய் சாகுபடி வயலில் ஊடு பயிராக கஞ்சா பயிரிட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற போலீஸாா் நடத்திய விசாரணையில், சுமாா் 6 அடி உயரமுள்ள கஞ்சா செடி சாகுபடி செய்யப்பட்டதை உறுதி செய்தனா். வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனா்.