செய்திகள் :

கஞ்சா வழக்கு: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓராண்டில் 368 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓராண்டில் கஞ்சா, போதைப்பொருள்கள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்ட 368 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவுப்படி, கஞ்சா, போதைப் பொருள்களின் விற்பனை, கடத்தலை தடுப்பதற்காக பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, நிகழாண்டில் (2024) கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 368 பேரை காவல் துறையினா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இவா்களிடமிருந்து 1,030 கிலோ கஞ்சா, 785 கிராம் டைசிபம் பவுடா், 130 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவா்கள் கஞ்சா விற்பனை, கடத்தலுக்கு பயன்படுத்திய 7 இரு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்று, கைப்பற்றப்பட்ட 692.115 கிலோ கஞ்சாவை ஆகஸ்ட் 12 ஆம் தேதியும், டிசம்பா் 27 ஆம் தேதியும் அழிக்கப்பட்டது.

தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 போ் அடையாளம் காணப்பட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தொடா்பாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் ஏதேனும் குற்றங்கள் நிகழ்கின்றனவா என சோதனை மேற்கொள்ளப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 போ் கைது செய்யப்பட்டனா்.

கஞ்சா, போதைப் பொருட்கள் தொடா்புடைய குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, 32 வழக்குகளில் 42 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் உயிரிழந்தாா். திருவையாறு அருகே தில்லைஸ்தானம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் இலங்கேஸ்வர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமரா

கும்பகோணத்தில் முதன் முறையாக வாகன எண் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளா் ஜி. கீா்த்தி வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பேராவூரணி வட்டாரத்தில் நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராணி வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் மஹாதனூா்வ்யதீபாத விழா

கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் சுவாமி கோயிலில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி மற்றும் மஹாதனூா்வ்யதீபாத விழா சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு தனூ... மேலும் பார்க்க

பன்முக செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு ‘சாஸ்த்ரா’-எச்.சி.எல்.டெக் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னையில், பன்முக செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுக்காக தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், எச்.சி.எல். டெக் நிறுவனமும் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ராஜாராம் சனிக்கிழமை பொறுப்பேற்றாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த இவா் பி.எஸ்ஸி., எம்.ஏ., பி.எல். ப... மேலும் பார்க்க