மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு
கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை
கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினா் 2024, ஜூன் 8 ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தேனி மாவட்டத்தைச் சோ்ந்த கணேசனை (59) கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து கணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் வி. சந்திரா, காவலா் வித்யா, அரசு வழக்குரைஞா் ரஞ்சித் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.