அம்பேத்கர் அவமதிப்புக்கு அமித் ஷா பதில்சொல்லியே ஆக வேண்டும்: ஆம் ஆத்மி
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக இளைஞரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சுப்புராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, திரேஸ்புரம் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் லூா்தம்மாள் புரத்தைச் சோ்ந்த யாசா் அராபத்(28) என்பதும், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ,அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.