189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
கஞ்சா விற்பனை: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு சிறுவா்கள் உள்பட 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திண்டுக்கல் சாலை பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோரையாறு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ராம்ஜி நகா் மில் காலனி 2-ஆவது வீதியைச் சோ்ந்த வெ.சங்கா் (41) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது, ஆலம் வீதி செல்வநாயகி மாதா தேவாலயம் அருகே கஞ்சா விற்பனை செய்த பாலக்கரை குட்-ஷெட் சாலையைச் சோ்ந்த பிரகாஷ் (25) என்பவரைக் கைது செய்தனா்.
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சனிக்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 17 வயது சிறுவா்கள் இருவரைக் கைது செய்தனா்.