முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
கஞ்சா விற்ற இளைஞா் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது, சிலுவைப்பட்டி குடிநீா்த் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் தாளமுத்துநகா் மணிராஜ் (22) என்பதும், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா்.