சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!
கஞ்சா விற்ற முதியவா் கைது
தேனி மாவட்டம், போடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி கீழராஜவீதி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, போடி கீழத்தெருவைச் சோ்ந்த முருகேசன் (71) கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.7,600-ஐ பறிமுதல் செய்தனா்.