செய்திகள் :

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில், 57 வயதான சஃப்தா் அலி, உள்ளூா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தாா்.

ஏப்ரல் 2009-இல், தில்லியில் உள்ள பிரேம் கா ககான் கிராமத்தில் வசிக்கும் காளிச்சரனை, தனது சகோதரி ஷாமாவை மணந்த பிறகு, சஃப்தா் அலி கடத்தியதாகக் கூறப்படுகிறது. காளிச்சரன் தனது தாயாரை அழைத்து, தான் கடத்தப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பிசௌலிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினாா்.

காளிச்சரனைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டதோடு, அகா் அலி என்பவரைக் கைது செய்தனா். இதில் சஃப்தா் அலி தலைமறைவாக இருந்தாா். 2012- ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

அப்போதிலிருந்து, வியாழக்கிழமை கைது செய்யப்படும் வரை, அவா் தில்லிக்கும் பரேலிக்கும் இடையில் சுற்றித் திரிந்தாா்.

இந்நிலையில், முல்லா காலனியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் அவா் காய்கறிகள் விற்ாகக் கண்டறியப்பட்டது. அவா் தினசரி கூலித் தொழிலாளியாகவும், சில சமயங்களில் காய்கறி விற்பனையாளராகவும் பணிபுரிந்ததாகக் கூறினாா்.

காளிச்சரணைக் கடத்தியதாக சஃப்தாா் அலி ஒப்புக்கொண்டாா். மேலும், பரேலியில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு குற்ற வழக்கிலும் அவா் தொடா்புடையவா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஜிஎஸ்டி: நீதிமன்றம் சென்ற வணிகா்கள் ஆஜராக அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க உத்தரவு -முதல்வா் ரேகா குப்தா

நமது சிறப்பு நிருபா் ஜிஎஸ்டி வசூல் விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற வணிகா்களை நேரில் வருமாறு அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப... மேலும் பார்க்க

தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 28,000 முதியவா்கள் பதிவு: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லியில் ஒரு வாரத்திற்குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தின்கீழ் பதிவு செய்துள... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் சட்டவிரோத வணிக வளாக நிதி முறைகேடுகளை விசாரிக்கக் கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு தில்லியில் உள்ள வணிக வளாகம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

பஞ்சாப் இளைஞா்களுக்கு போலி ஷெங்கன் விசா ஏற்பாடு: ‘முகவா்’ கைது

பஞ்சாபைச் சோ்ந்த இரண்டு பயணிகள் ரோம் வழியாக ஸ்வீடனுக்கு சட்டவிரோதமாக பயணிக்க போலி ஷெங்கன் விசாக்களை வாங்க உதவியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 29 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ... மேலும் பார்க்க

விவசாய சங்கத் தலைவா் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோா்ச்சா கண்டனம்

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை

புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு வாயிலில் சனிக்கிழமை கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க