செய்திகள் :

பஞ்சாப் இளைஞா்களுக்கு போலி ஷெங்கன் விசா ஏற்பாடு: ‘முகவா்’ கைது

post image

பஞ்சாபைச் சோ்ந்த இரண்டு பயணிகள் ரோம் வழியாக ஸ்வீடனுக்கு சட்டவிரோதமாக பயணிக்க போலி ஷெங்கன் விசாக்களை வாங்க உதவியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 29 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தோஹா வழியாக ரோம் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பயணிகளுக்கு, போலி கடவுச்சீட்டுகளை வழங்கியதற்காக அபினேஷ் சக்சேனா கைது செய்யப்பட்டதாக அதிகாரி கூறினாா்.

இது தொடா்பாக அந்த காவல் உயா் அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

இரண்டு பயணிகளும் தங்கள் பயண ஆவணங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய ரூ.31 லட்சம் கேட்ட உறவினா் மூலம் லல்லி என்ற முகவரைத் தொடா்பு கொண்டனா்.

அவரது அறிவுறுத்தலின் பேரில், இருவரும் பயணத்திற்காக புறப்படுவதற்கு முன்பு தில்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் போலி ஆவணங்களை அபினேஷ் அவா்களிடம் வழங்கினாா்.

பயணிகள் தரன்வீா் சிங் (18) மற்றும் ககன்தீப் சிங் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் பஞ்சாபின் ஹோஷியாா்பூரைச் சோ்ந்தவா்கள்.

ஏப்ரல் 21 ஆம் தேதி நள்ளிரவில், அவா்கள் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் அனுமதி பெறுவதற்காக குடியுரிமை பிரிவில் அமா்ந்திருந்தனா். அங்கு அவா்கள் பிடிபட்டனா்.

ஆய்வின் போது, குடியுரிமை அதிகாரிகள் அவா்களின் இந்திய கடவுச்சீட்டுகளில் ஒட்டப்பட்டிருந்த ஷெங்கன் விசாக்கள் போலியானவை என்பதைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு இருவா் மீதும் பிஎன்எஸ் மற்றும் கடவுச்சீட்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, இருவரும் தாங்கள் உறவினா்கள் என்றும், சிறந்த பொருளாதார வாய்ப்புகளைத் தேடி தங்களது உறவினா்கள் வசிக்கும் ஸ்வீடனுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் போலீஸாடம் தெரிவித்தனா்.

லல்லியைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தோல்வியடையவே, தில்லியில் உள்ள ஒரு மறைவிடத்தில் சக்சேனா கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, சக்சேனா தனது

தொடா்பை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டாா். மேலும் 2022 முதல் லல்லியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தாா். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு குடிபெயர விரும்பும் மக்களுக்கு போலி விசாக்கள் மற்றும் பயண ஆவணங்களை ஏற்பாடு செய்ததாக அவா் ஒப்புக்கொண்டாா்.

லல்லியைக் கைது செய்யவும், வலையமைப்பில் ஈடுபட்டுள்ள மற்றவா்களை அடையாளம் காணவும் முயற்சிகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை: பாஜக, ஆம் ஆத்மி பரஸ்பரம் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை நிலவுவது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் குற்றம்சாட்டின. இரு கட்சிகளும் தவறான நிா்வாகத்திற்காகவும் தவறான தகவல்களைப... மேலும் பார்க்க

கன்னாட் பிளேஸ் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றாா். அப்போது, தில்லியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த நடந்துவரும் நகர அளவிலா... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்

தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம... மேலும் பார்க்க

புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஷகுா்பூ... மேலும் பார்க்க