செய்திகள் :

கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா: காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!

post image

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகளை மோப்ப நாய் உதவியோடு காவல்துறையினர் சோதனை செய்துகொண்டிருந்த போது கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெட்டியைப் பார்த்ததும் அங்கேயே அமர்ந்துகொண்டு தரையை தோண்டுவது போல செய்து காவல்துறையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

உடனடியாக பெட்டியை திறந்து, போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய்லாந்து நாட்டு தலைநகர்‌ பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு போதை பொருளை கண்டுபிடிப்பதற்கான, நிபுணத்துவம் வாய்ந்த மோப்ப நாயையும், இந்த சோதனைக்கு பயன்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து, சென்னை வந்த தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை, மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்பநாய், உடனடியாக அதே இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களால் தரைய கீறி சைகை காட்டியது.

சுங்க அதிகாரிகள் அட்டைப்பெட்டிகளை திறந்துப்பார்த்து சோதனை செய்தனர். அதில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அட்டைப் பெட்டிகளில் 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 7.6 கோடி. இதை அடுத்து போதைப் பொருள் கடத்திய பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் 44-ஆவது ‘கிருஷ்ண விஜயதுா்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீரௌத ஸ்மாா்த் வித்வத் மகா சபை’ திருப்பதி மடத்தில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் முதல்வர் கோரிக்கை!

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். இதனிடையே, பிரதமர் மோடியுடன் திசநாயக இன்று(டிச .16) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை... மேலும் பார்க்க

போதைப்பொருள் விற்பனையில் ஈட்டிய பணம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? -அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாடு பாடநூல் கழகம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கு மறைமுகமாக உதவியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.தமிழ்நாடு பாடநூல் கழகம் கு... மேலும் பார்க்க

முதல்வரின் செயலர்களுக்கான துறைகள் மாற்றம்!

சென்னை: தமிழக முதல்வரின் செயலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து இன்று(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல்வரின் தனிச் செயலர் உம... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா மரணம்!

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 84.1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு ... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.7 கிலோ தங்கம்: விமான ஊழியர் உள்பட இருவர் கைது!

சென்னை: துபையிலிருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த சம்பவத்தில், விமான ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தங்கம் கடத்தி வந... மேலும் பார்க்க