சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவ...
கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!
துணைக் கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ்
இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருடன் இணைந்து டு பிளெஸ்ஸிஸ் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளார்.
Pick up your phones, it’s your vice-captain calling ❤️ pic.twitter.com/W3AkYO4QKZ
— Delhi Capitals (@DelhiCapitals) March 17, 2025

தில்லி அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து டு பிளெஸ்ஸிஸ் பேசியதாவது: நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தில்லி அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். தில்லி அணியின் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகவும், அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவதற்கு தயாராகவும் இருக்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானைவிட சிறந்தது இந்திய அணி: பிரதமர் மோடி
40 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் கடந்த மூன்று சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கேப்டனாக வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு மெகா ஏலத்துக்கு முன்பாக டு பிளெஸ்ஸிஸை ஆர்சிபி தக்கவைக்கவில்லை.
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் ஏலம் போகாத டு பிளெஸ்ஸிஸ், ஏலத்தை நிறைவு செய்யும் விரைவு சுற்றில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.