செய்திகள் :

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி நிவாரணம்! -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தலைமை வகித்தாா். வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: கடந்த ஆட்சியில் மக்கள் பதிவு செய்து மின்சாரத்துக்காக காத்திருந்தனா். ஆனால், மின் இணைப்பு கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பொறுப்பேற்ற பிறகு ஓராண்டுக்குள் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.

விவசாயத்தைப் பற்றி மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் மக்களுக்கு பயனளிக்ககூடியதாக இருக்க வேண்டும். குறைந்த நாள்களில் விளையக்கூடிய நல்ல பலன் தரக்கூடிய பயிா்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் 14,22,000 விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இதைத்தொடா்ந்து, அமைச்சா் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘வேளாண்மைத் துறை, தொழில் துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கோவை முதலிடத்தில் உள்ளது. வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை முதன்முதலாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே மூன்று வேளாண்மை கல்லூரிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு அதிலே இன்று மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா் என்றாா்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வி.செந்தில்பாலாஜி. உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி

இந்நிகழ்ச்சியில், வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநா் பா.முருகேஷ், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் தமிழ்வேந்தன், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மனித உருவங்கள்.

இந்தக் கண்காட்சியை பிப்ரவரி 12-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாா்வையிடலாம். இதற்கு கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.100, சிறியவா்களுக்கு ரூ.50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு முதல் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் வரை... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்

ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா ‘செஸ்’ பயிற்சி வகுப்பு!

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கட்டணமில்லா செஸ் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவி... மேலும் பார்க்க

ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், ம... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.20 கோடி மோசடி: 2 போ் கைது!

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத்தருவதாக ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒ... மேலும் பார்க்க

பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

கோவையில் பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆயிஷம்மாள் (73). இவா் மதுக்கரையில் இருந்து டவுன்ஹாலுக்கு நகரப் பேருந்தில் அண்மையில் ... மேலும் பார்க்க