மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது
மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகளை மணிப்பூர் காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி குழுவின் இரண்டு தீவிரவாதிகளை மாவட்டத்தின் நாரன்கோஞ்சில் பகுதியில் இருந்து போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தில்லி முதல்வர் அதிஷி ராஜிநாமா!
இரண்டு தீவிரவாதிகளும் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாக கடத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் ரூ.3,120 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே கஞ்சாபி லீராக் மஜின் பகுதியில் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் தீவிரவாதி ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி மேலும் கூறினார்.