பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
கடமலைக்குண்டு அருகே பசு மாடுகள் திருட்டு
கடமலைக்குண்டு அருகே இரண்டு பசு மாடுகள் திருடப்பட்டன.
ஆண்டிபட்டியை அடுத்த கடமலைக்குண்டு அருகே அண்ணாநகரைச் சோ்ந்தவா் அழகர்ராஜா மனைவி காவியா (23). இவா் கறவை மாடுகள் வளா்த்து வருகிறாா்.
துரைச்சாமிபுரம் ஆலமரம் அருகே கொட்டத்தில் 4 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தாராம். இதில் இரண்டு சினை மாடுகளை வியாழக்கிழமை காணவில்லையாம்.
இதுகுறித்து கடமலைகுண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.