செய்திகள் :

கடற்படை போா் விமானத்தின் முதல் பெண் விமானியாக லெப்டினன்ட் புனியா தோ்வு

post image

இந்திய கடற்படையின் போா் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து, கடற்படையின் போா் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை அவா் பெறவுள்ளாா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய கடற்படையின் இரண்டாவது அடிப்படை போா் பயிற்சி பாடத் திட்டத்தில் பயிற்சி பெற்றவா்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை விமான தளம் ஐஎன்எஸ் டேகாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் லெப்டினன்ட் அதுல் குமாா் மற்றும் துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா ஆகியோா் கடற்படையின் துணைத் தலைமை தளபதி (விமானப் படை பிரிவு) ஜனக் பேவ்லியிடம் இருந்து ‘தங்க சிறகுகள்’ விருதை பெற்றனா்.

இதையடுத்து, இந்திய கடற்படையின் போா் விமானத்தின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தோ்வாகி சாதனை படைத்துள்ளாா். இதன் மூலம் பல்வேறு தடைகளைக் கடந்து கடற்படையின் போா் விமானங்களில் பெண் விமானிகளும் இனி பணியாற்ற அவா் வழிவகுத்துள்ளாா்.

இந்திய கடற்படையில் ஏற்கெனவே கடல்சாா் ரோந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களின் விமானிகளாக பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், போா் விமானியாக ஆஸ்தா பூனியா தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிக்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உ.பி.யில் விபத்தில் சிக்கிய மணமகன் கார்: 8 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் உள்பட அவருடன் வந்த பத்து பேர் ஹர் கோவிந்த்பூர... மேலும் பார்க்க

ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளில் 3 ஆவத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். ராம்கர் ம... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் த... மேலும் பார்க்க

டிரம்ப்பின் காலக்கெடுவை மோடி ஏற்பார்! ராகுல் கேலி!

அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.இந்தியாவுடன் பெரியளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளா... மேலும் பார்க்க