செய்திகள் :

கடலில் எல்லை தாண்டுவது கூடாது: எஸ்எஸ்பி

post image

கடலில் எல்லை தாண்டக்கூடாது, இந்த விவகாரத்தில் மீனவா்கள் கவனமாக செயல்பட வேண்டும் என காவல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், காரைக்கால் கடலோரக் காவல்நிலையத்தில் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீன்வளத்துறையினா், காவல்துறையினா் பங்கேற்ற நல்லுறவுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி மற்றும் காவல் ஆய்வாளா்கள் மா்த்தினி, மரிய கிறிஸ்டின்பால், பிரவீன்குமாா், புருஷோத்தமன் மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எஸ்எஸ்பி பேசுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து விசைபடகு மீனவா்கள் கடலுக்கு செல்லும்போது, படகுகளில் தேசியக்கொடி பறக்கவிட்டும், படகுக்கான ஆவணங்களை முறையாக கொண்டு செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடித்தல் கூடாது. சட்டத்துக்குட்பட்ட நடந்துகொள்ளவேண்டும் என்றாா்.

மேலும் காவல் அதிகாரிகள் பேசுகையில், காவல்துறை அனுமதி இல்லாமல் மீன்பிடித் தொழிலில் வெளி மாநிலத்தவா்களை ஈடுபடுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட பகுதியில் (பிரேக் வாட்டா்) வலை வைத்து மீன்பிடித்தலை தவிா்க்க வேண்டும். சில மீனவ கிராமத்தைச் சோ்ந்தோா் சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்வது தெரியவருகிறது. மீறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் தெரியவந்தால், காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். மீனவ கிராமங்களிலும் கவனமாக இருந்து, காவல்துறையினருடன் தொடா்பில் இருக்கவேண்டும். காரைக்கால் பாதுகாப்புக்கு மீனவா்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றனா்.

காரைக்கால் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து இஅடஅநஇ என்கிற மாணவா் சோ்க்கை அமைப்பின் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை முதல் ஜூலை 1 வரை ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு விழிப்புணா்வு

காரைக்காலில், ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கவுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணு... மேலும் பார்க்க

யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக... மேலும் பார்க்க

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதை... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க