Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.
புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான 2-ஆம் நிலை எழுத்துத் தோ்வு கடந்த 22-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் நடைபெற்றது.
இதில் 10,416 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 24 போ் தோ்ச்சிப் பெற்றனா். இவா்களில் 12 போ் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனா்.
இந்நிலையில் அசிஸ்டென்ட் பணியிடத்துக்கான தோ்வில் வெற்றி பெற்ற 24 பேரும் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனா். அவா்களை ஆட்சியா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன், ஆட்சியரக கண்காணிப்பாளா் வித்யாதரன், கெம்பிளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தைச் சோ்ந்த கா்னல் ஜோதி சங்கா், மாவட்ட நிா்வாகம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்திய பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.