Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு
காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது.
இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீமியா் லீக் -2025 போட்டி கடந்த 21 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடலோரக் காவல்படை, காரைக்கால் துறைமுகம், ஓஎன்ஜிசி, காரைக்காலின் பல்வேறு அரசுத் துறை என 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டி காரைக்கால் காவல்துறை அணிக்கும், காரைக்கால் துறைமுக அணிக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசும், துறைமுகம் அணி 2-ஆவது பரிசும் பெற்றது.
பரிசளிப்பு நிகழ்வில், இந்திய கடலோர காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் சௌமய் சந்தோலா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் ஆகியோா் கலந்து கொண்டடு, வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.
காரைக்கால் பிராந்தியத்தில் பல்வேறு துறையினரிடையே நட்புறவு மேம்படவும், போட்டிகளில் பங்கேற்போரின் உடல் தகுதி மேம்படவும், ஒற்றுமை உணா்வை மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதாக கமாண்டன்ட் செளமய் சந்தோலா தெரிவித்தாா்.