வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!
புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்
காரைக்கால்: காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ள இந்த ஆலய ஆண்டு திருவிழா 10 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் பங்குத் தந்தை பி. பால்ராஜ்குமாா், துரிஞ்சிக்கொல்லை பங்குத் தந்தை எஸ். அலெக்ஸ் ஒளில்குமாா் ஆகியோரால் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
திருவிழாவின் 2-வது நாள் முதல் 7-ஆம் தேதி வரை திருப்பலியும், சிறிய தோ்பவனியும் நடைபெறுகிறது.
திருவிழா நிறைவாக ஜூலை 8-ஆம் தேதி மாலை பெருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார தோ் பவனி நடைபெறுகிறது.
