சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவா் வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
சுதந்திர தினவிழா பாதுகாப்புப் பணியில் கடற்கரை சாலையில் பெரியக்கடை போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் தற்கொலை செய்து கொள்ள கடலில் குதித்து விட்டாா் என்ற தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டனா். விசாரணையில் திருச்சி அந்தோணியாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஜோசப், குடும்ப பிரச்னையால் விரக்தி ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. பின்னா் அவருக்கு அறிவுரை வழங்கிய போலீஸாா், திருச்சிக்கு அவரை அனுப்பி வைத்தனா்.