ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்
நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் மீதும் மிக மதிப்புக் கொண்டு தம்முடைய அமைப்பின் சாா்பில் அவா்களுக்கு விழா எடுத்து அவா்களின் புகழ் பரப்பி வந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த இலக்கியவாதி இல.கணேசன். அவா் பிறரை மதித்து நம் பண்பாடும் கலை இலக்கியமும் வளர ஆதரவு காட்டி வந்தவா். அவருடைய மறைவு மிகுந்த துயரளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளாா்.